loader

Weekly benefits for Aquarius

  • Home    >
  • Weekly benefits

Aquarius 06 Sep 2021 - 12 Sep 2021

 

தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி செயல்பட ஆரம்பிக்கும். சிலருக்கு வாகன லாபம் இருக்கும்

சாதகங்கள்: தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி செயல்பட ஆரம்பிக்கும். சிலருக்கு வாகன லாபம் இருக்கும். சுபகாரியங்கள் நிச்சயமாகும், சகோதர வழியில் ஆதரவு கிடைக்கும். தொழிலில் தயக்கங்கள் குறையும். அரசாங்க உதவிகள் அனுகூலமாகும். வீடு நிலம் வாங்குவதில் உள்ள தடைகள் இனி இருக்காது. உடல் நலனும் நன்றாக இருக்கும். பயன்தரும் இடமாற்றங்கள் இருக்கும். நீண்ட தூர பிரயாணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. பிரயாணம் நன்மை தரும்.  

கவனம் தேவை: ஏழில் செவ்வாய் இருப்பதால் மனதில் வீண் கவலைகள் எழும். மனைவி அல்லது கணவன் தாம்பத்திய உறவில் சில சில்லரை பிரச்னைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய காலம். உங்கள் மீது கோள் மூட்டி விட்டு கலகம் செய்ய, மறைமுக எதிரிகள் தயாராக இருக்கிறார்கள். சூரியனால் சில உஷ்ண உபாதைகள் ஏற்படும்.

பரிகாரம்: மாலை ஐந்தரை மணிக்கு மேல் விளக்கேற்றி, ‘‘சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே” என்ற மந்திரத்தைச் சொல்லுங்கள். மலைபோல் துன்பம் வந்தாலும் நீங்கி மனதில் புத்துணர்வு பிறக்கும்.