பெரியவர்களின் அருளாசி பெற்ற கும்ப ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் பணம் கொடுப்பவர்கள் சில காரணங்கள் சொல்லி தள்ளிப்போடலாம். கவலை வேண்டாம். தொழிலில் நல்ல முன்னேற்றங்களும் வருமானமும் அதிகரித்து காணப்படும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். நல்ல வியாபாரம் நடக்கும். தேங்கிய பொருட்கள் எல்லாம் விற்பனையாகிவிடும். குடும்பத்தில் கணவன், மனைவி ஒற்றுமையில் சிறு சங்கடங்கள் வந்து விலகும். மனைவியின் உடல்நலத்தில் தகுந்த கவனம் தேவை. வீடு மனை வாகன வகைகளில் திருப்தியான நடைமுறைகள் இருக்கும். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் வெட்கி தலைகுனிந்து திரும்பி போய்விடுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் கடந்த காலங்களில் இருந்த சிறப்புற்ற செயல்நிலைகள் மாறி மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான பணி வாய்ப்புகளைப் பெறுவார்கள். அதிக வேலை வாய்ப்புகளை பெற்று நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். மாணவர்கள் கல்வியில் ஞான சிந்தனையுடன் செயல்பட்டு முதல்தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள்.
பரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லி விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் சாற்றுங்கள்.